Friday, 21 March 2014

C and C++

C and C++ மொழிகளை ஆன்லைனில் கற்க சிறந்த இணையத்தளங்கள்...

பலருக்கு Computer Programming Language கற்க ஆசையாக இருக்கும். அந்த வகையில் இணையத்தில் பல பல தளங்கள் காணப்படுகிறது. ஆனால் அவற்றில் சிறந்ததைத் தேர்வு செய்வது மிகக் கடினமாகும். எனவே, இங்கே நான் பார்த்த வகையில் சிறந்த இணையத்தளங்கள் பற்றி கூறியுள்ளேன்.

C Language ஆனது யாருக்கு உதவுகிறதோ இல்லையோ, Computer Engineer களுக்கு அவசியமானது. சரி, தொடர்ந்து பார்க்கலாம்..

1.Wibit.net - http://wibit.net/



இது தான் முதன் முதலாக C Language கற்க பல வசதிகளையும் உள்ளடக்கிய இணையத்தளமாகும். அதாவது, இங்கு வீடியோ டுட்டோரியல்ஸ் உள்ளது. இவற்றை நீங்கள் தரவிறக்கி கற்றுக்கொள்ளலாம், அல்லது PDF file ஆக நிறுவியும் கற்கலாம். அது உங்கள் விருப்பம்.

2.Cplusplus.com - Cplusplus.com



இத் தளத்தில் நீங்கள் PDF மூலம் தரவிறக்கியும் கறக்கலாம்... அல்லது அங்கு குறிப்பிடப்பட்ட பிரிக்கப்பட்ட பாடம், பாடமாகவும் கற்கலாம். மேலும், இங்கு Forum option உம் உள்ளது. அதாவது உங்களுக்கு ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் வேறு பலருடனும் அது பற்றி கலந்து ஆலோசித்து அவர்களின் சிந்தனையை பரிமாறிக் கொள்ளலாம்

3. Academictutorials.com - Academictutorials.com


இங்கு பல விதமான முறைகளில் பாடங்கள் பிரிக்கப்பட்டு காணப்படுகிறது. மேலும் இங்கு C++ Language பற்றி உதாரணங்கள் என்பவற்றுடன் தெளிவாக விளங்கக்கூடியதாக உள்ளது.

இதைவிட, எவளவு தூரம் உங்களுக்கு இந்தப் பாடங்கள் பற்றி உங்களுக்கு விளங்கியுள்ளது என்பதை அறிய ஒரு Quiz மாதிரியான வடிவில் பரீட்சை காணப்படுகிறது. நீங்கள் அதன் மூலம் பயன் பெற்றுக்கொள்ளலாம்.

நிச்சயமாக இந்தத் தளம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

4. CProgramming.com - CProgramming.com



இங்கு, நீங்கள் C மற்றும் C++ பற்றிய சில டிப்ஸ் களை அறியலாம். இங்கும், Quiz வடிவிலான பரீட்சை முறை உள்ளது.மேலும் இதன் மூலம் உங்களுக்கு உங்கள் திறமையின் மூலம் வேலை பெறக் கூடிய வாய்ப்பையும் பெறலாம்.

கீ போர்டில் இல்லாத குறியீடுகள்


Alt + 0153..... ™... trademark symbol
Alt + 0169.... ©.... copyright symbol
Alt + 0174..... ®....registered ­ trademark symbol
Alt + 0176 ...°......degre ­e symbol
Alt + 0177 ...±....plus-or ­-minus sign
Alt + 0182 ...¶.....paragr ­aph mark
Alt + 0190 ...¾....fractio ­n, three-fourths
Alt + 0215 ....×.....multi ­plication sign
Alt + 0162...¢....the ­ cent sign
Alt + 0161.....¡..... ­.upside down exclamation point
Alt + 0191.....¿..... ­upside down question mark
Alt + 1...........sm­iley face
Alt + 2 ......☻.....bla ck smiley face
Alt + 15.....☼.....su­n
Alt + 12......♀.....f­emale sign
Alt + 11.....♂......male sign
Alt + 6.......♠.....spade
Alt + 5.......♣...... ­Club
Alt + 3............. ­Heart
Alt + 4.......♦...... ­Diamond
Alt + 13......♪.....e­ighth note
Alt + 14......♫...... ­beamed eighth note
Alt + 8721.... ∑.... N-ary summation (auto sum)
Alt + 251.....√.....s­quare root check mark
Alt + 8236.....∞..... ­infinity
Alt + 24.......↑..... ­up arrow
Alt + 25......↓...... ­down arrow
Alt + 26.....→.....ri­ght arrow
Alt + 27......←.....left arrow
Alt + 18.....↕......up/down arrow
Alt + 29......↔...left right arroW

""BatteryCare""

லேப்டொப் பட்டரிகளின் முழுமையான விபரங்களை அறிந்துகொள்வதற்கு

லேப்டொப் கணனிகளில் இணைக்கப்பட்டுள்ள பட்டரிகள் காலம் செல்லச் செல்ல பொதுவாக அவற்றின் பாவனைத் திறன் குறைந்து கொண்டே செல்லும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவற்றினை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டிய அவசியம் ஏற்படும். இதற்காக குறித்த பேட்டரிகளின் நிலை தொடர்பில் முழுமையான விபரங்களை அறிந்துகொள்ள BatteryCare எனும் சிறிய மென்பொருள் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது.

முற்றிலும் இலவசமான மென்பொருளில் உதவியுடன் பட்டரிகளை மட்டுமன்றி CPU, Hard Disk போன்றவற்றின் வெப்பநிலைகளையும் அறிந்துகொண்டு அதற்கு ஏற்றவாறு லேப்டொப்பினை பாவனை செய்ய முடியும்.

பென்ட்ரைவை RAM ஆக்கலாம் வாங்க



நம்மில் சிலருக்கு நம் கம்ப்யூட்டரில் உள்ள RAM காரணமாக நம்மால் வேகமாக செயலாற்ற முடியாது. RAM இன் விலை காரணமாக அதை சிலர் வாங்காமல் இருப்போம். மாற்று வழியாக பென்ட்ரைவை RAM ஆக பயன்படுத்தலாம்வாங்க.

பென்ட்ரைவை கம்ப்யூட்டரில் செருகவும்.
My Computer மீது Right Click செய்யவும்.
இப்போது Properties என்பதை செலக்ட் செய்யவும்.
இப்போது அதில் Advanced Option/ Advanced settings செல்லவும்.
இப்போது வரும் Pop- up விண்டோவில் Performance என்பதில் Settings ஐ கிளிக் செய்யவும்.
இப்போது வரும் புதிய pop-up விண்டோவில் Advanced என்பதை செலக்ட் செய்யவும்.
இப்போது Change என்பதை தெரிவு செய்யவும்.

இப்போது மேலே உள்ளது போல வட்டமிட்டுள்ள பகுதியை கிளிக் செய்யாமல் விட்டு, கீழே உள்ளதில் இருந்து உங்கள் பென் ட்ரைவை தெரிவு செய்யவும்.
இப்போது உங்கள் பென் ட்ரைவ் மெமரிக்கு ஏற்ப அது RAM ஆக work ஆக ஆரம்பிக்கும்.
இப்போது இதனை save செய்யவும்.
கம்ப்யூட்டரை Restart செய்யவும்.

""ஃப்ரீ கால்""

இன்று வெளியான இதழில் இருந்து ....

பேலன்ஸ் எதுக்கு? ஃப்ரீ கால் இருக்கு! 

செல்போனில் பேலன்ஸ் இல்லாதவர்கள் இலவசமாகப் பேச ஒரு சேவை தொடங்கப்பட உள்ளது

இப்போதெல்லாம் மாதச் செலவில் பாலுக்கு, பேப்பருக்கு என்று எடுத்துவைப்பது போல் செல்போனுக்கு என்று தனியாக பணம் எடுத்து வைக்கும் அளவுக்கு வீட்டில் இருக்கும் அனைவரிடமும் செல்போன் இருக்கிறது. என்னதான் கால் பூஸ்டர், மெசேஜ் பூஸ்டர் என்று போட்டாலும் 500 ரூபாய்க்கு குறையாமல் செல்போன் விழுங்கி விடும். ‘கவலையை விடுங்க. இன்னும் கொஞ்ச நாட்களில் எல்லோருமே இலவசமாகப் பேசலாம்’ என்கிறார்கள் பெங்களூருவில் உள்ள எம்.எஸ். ராமையா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள்.

யாஷ்வாஸ் சேகர், விஜயகுமார் உமலுட்டி மற்றும் சண்டேஷ் ஈஸ்வரப்பா என்கிற மூன்று மாணவர்களும் இணைந்து ஃப்ரீகால்(Freekall) என்கிற இலவச அழைப்புச் சேவையைக் கண்டுபிடித்து ஒரு நிறுவனமாக்கியிருக்கிறார்கள். இதன்மூலம் பேசுவதற்கு நம் போனில் பேலன்ஸ் தேவையில்லை. ஏற்கெனவே ஸ்கைப், வைபர், ஃபேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்தி இலவசமாகப் பேசலாம் என்றாலும் அதற்கு எல்லாம் இணையம் தேவை. ஆனால் ஃப்ரீகாலுக்கு இணையம் கூடத் தேவையில்லை. நமது அலைபேசியில் இருந்து 080-67683693 என்கிற எண்ணுக்கு அழைத்தால் போதும், அந்த அழைப்பு தானாகவே துண்டிக்கப்பட்டு நமது அலைபேசிக்கு அழைப்பு வரும். அந்த அழைப்பை ஏற்றவுடன் நாம் பேச வேண்டிய எண்ணை பதிவு செய்யச் சொல்லி கணினியின் குரல் கேட்கும். நாம் எண்ணைப் பதிவு செய்தபின்பு பேச வேண்டிய நபருக்கு இணைப்பு கொடுக்கப்படும். இதன் செயல்முறை டிரங்க் கால் போல் இருந்தாலும் இது முழுக்க முழுக்க மேகக் கணிமை(Cloud computing) முறைப்படி இயங்குகிறது. ஜிமெயில், ஃபேஸ்புக் போல் இதற்கும் கணக்கை உருவாக்க வேண்டும். கணக்கு வைத்திருப்பவர்கள் பன்னிரண்டு நிமிடங்கள் பேசலாம். கணக்கு இல்லாதபட்சத்தில் மூன்று நிமிடங்கள் மட்டுமே பேசமுடியும்.

இதை முதற்கட்டமாக பெங்களூருவில் சோதனை செய்து பார்த்தபோது மிக அதிக அழைப்புகள் வந்ததால் ஃப்ரீகாலின் சர்வர் ஏழு முறை பழுதடைந்து விட்டது. இதனால் தற்போது அதிகத் திறன் உள்ள சர்வர் பொருத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ஆம் தேதியில் இருந்து இந்தியா முழுமைக்கும் இந்தச் சேவை செயல்படுத்தப்படும் என்றும், ஒரே நாளில் இந்தியா முழுக்க ஒரு கோடி அழைப்புகள் வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் ஃப்ரீகால் தெரிவித்துள்ளது.

இந்தச் சேவை வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வாங்கவில்லையே தவிர, வேறு வழிகளில் பணம் ஈட்டுகிறது. அதாவது நீங்கள் டயல் செய்யும் போது ரிங்கிற்கு பதிலாக விளம்பரங்கள் ஓடும். அதே போல் பேசும் ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு நடுவே விளம்பரம் ஒலிபரப்பப்படும். இதன் மூலம் வருடத்திற்கு நூற்றி எண்பது கோடி வரை வருமானம் பெறமுடியுமாம். இந்தியா மட்டுமில்லாமல் மூன்றாம் உலக நாடுகள் அனைத்திலும் ஃப்ரீகாலுக்கு வரவேற்பு அதிகம் இருக்கும் என்று ஃப்ரீகால் நினைக்கிறது. அதனால் ஆரம்பிக்கும் போதே உலகம் முழுக்க ஆரம்பிக்கலாமா என்று ஃப்ரீகால் யோசித்து வருகிறது. ஃப்ரீகால் கணக்கை http://www.freekall.in/ என்கிற இணையதளத்தில் சென்று பதிவுசெய்து கொள்ளலாம்.https://www.facebook.com/freekall என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் அவர்களது செயல்பாடுகளைத் தெரிந்துகொள்ளலாம்.